ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர் பங்கேற்பு
அமெரிக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

டெல்லி, ஜன.12 ; அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால்டு ட்ரம்ப் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்கச் செல்லும் ஜெய்சங்கர், புதிய அமெரிக்க நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். டொனால்டு ட்ரம்ப்பின் பதவிக்காலம் தொடங்கவுள்ள நிலையில், ஜெய்சங்கரின் அமெரிக்கப் பயணம் இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.







