3 இஸ்ரேலிய பெண் பிணைக்கைதிகள் விடுவிப்பு
15 மாதங்களுக்குப் பின் வீடு திரும்பினர்; கண்ணீர்மல்க வரவேற்பு

காசா, ஜன.20; காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட 3 இஸ்ரேலிய பெண் பயணக்கைதிகள், 15 மாதங்களுக்குப் பின்னர் தங்களது குடும்பங்களுடன் இணைந்தனர். 90 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக முதற்கட்டமாக இஸ்ரேலிய பெண்கள் மூவரை ஹமாஸ் விடுதலை செய்தது. செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மூவரும், டெல் அவிவ் நகருக்கு திரும்பியபோது அந்நகரமே ஆனந்தக்கண்ணீர் வடித்தது. 3 பெண்களையும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நாடே உங்களை வரவேற்பதாக” தெரிவித்தார்.



