90 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்
வீடுகள் தரைமட்டமாகிப் போனதை பார்த்து கண்ணீர்

காசா, ஜன.20; இஸ்ரேலிய பெண் பணயக்கைதிகள் மூன்று பேரை ஹமாஸ் விடுவிடுத்ததை அடுத்து, 90 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைத்துறை விடுவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட அந்த 90 பேரும், மேற்குக்கரைக்கு திரும்பியபோது மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். பாலஸ்தீனத்திற்கு திரும்பியதில் மகிழ்ச்சி என்றாலும், தங்களது வீடுகள் இஸ்ரேலிய படைகளால் தரைமட்டமாகிப் போயிருந்ததைப் பார்த்து அவர்கள் கண்ணீர் வடித்தனர்.



