பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை+கொலை வழக்கு
குற்றவாளி மரணம் எய்தும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

கொல்கத்தா, ஜன.20; கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரணம் எய்தும் வரை ஆயுள் தண்டனை விதித்து சீல்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை வாசித்த நீதிபதி, “இவ்வழக்கு அரிதினும் அரிதான பிரிவின் கீழ் வராது” என்று குறிப்பிட்டார். சஞ்சய் ராய்க்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், பயிற்சி மருத்துவரின் குடும்பத்திற்கு ₹17 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மேற்குவங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.







