பணயக்கைதிகள் 8 பேரை விடுவித்தது ஹமாஸ்

காசா எல்லையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு ஆரவார வரவேற்பு

காசா, ஜன.31; இஸ்ரேல் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் பிடியிலிருந்த மேலும் 8 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் தாய்லாந்து நாட்டவர் ஐந்து பேரை ஹமாஸ் அமைப்பினர் காசா எல்லையில் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் பொங்க அவர்களை வரவேற்றனர். இதுவரை இஸ்ரேலிய சிறைகளிலிருந்த 110 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 97 பேரில், 15 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x