பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு; மம்தா அதிருப்தி
குற்றவாளிக்கு மரண தண்டனை கோரினோம் எனக் கருத்து

முர்ஷிதாபாத், ஜன.20; கொல்கத்தா பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். “தீர்ப்பு எனக்கு திருப்தியளிக்கவில்லை; நாங்கள் அனைவரும் மரண தண்டனையை கோரினோம், ஆனால் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது”என்று சீல்டா நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மம்தா எதிர்வினையாற்றினார். கொல்கத்தா காவல்துறையிடமிருந்து விசாரணை வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய மம்தா , விசாரணையை போலீஸே தொடர்ந்திருந்தால், குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.







