பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்சாரம்
அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவு

சென்னை, பிப்.07; சிபிஎஸ்இ, ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எனவே, அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 மணி வரை தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
“தேர்வு நேரத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளக்கூடாது”

மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின் மாற்றியை கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 5 மையங்களுக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். தேர்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது என்றும் அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.






