தென்கொரிய அதிபர் கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு
சியோலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மாபெரும் போராட்டம்

சியோல், ஜன. 5 ; தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, சியோலில் போராட்டம் நடைபெற்றது. தென்கொரிய அதிகாரிகள் வடகொரியாவுடன் இணைந்து துரோகமிழைத்து வருவதாகக்கூறி, தென்கொரியாவில் ராணுவ ஆட்சி சட்டத்தை அதிபர் இரு தினங்களுக்கு முன் அறிவித்தார். ஆயினும், சில மணி நேரங்களிலேயே சட்டம் திரும்பப் பெறப்பட்டது. எனினும், அதிபர் யூன் சுக் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தென்கொரிய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அதிபர் கைது செய்யப்பட்டார்.







