திடீர் ஓய்வு ஏன்?; மௌனம் கலைத்தார் ஆர்.அஸ்வின்
"ரசிகர்களின் சொற்போர் நச்சுத்தன்மை வாய்ந்தது" என வேதனை

சென்னை, ஜன.15; கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவு உள்ளுணர்வால் திடீரென எடுக்கப்பட்டது என, ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். “எனக்கு இந்த இடைவெளி தேவைப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். “எனது முடிவு குறித்து பலவாறாக பேசப்படுகிறது, ஆனால் அப்படி எதுவும் இல்லை” எனவும் அஸ்வின் கூறினார். “அதே நேரத்தில் நான் எனது படைப்பாற்றலை இழந்துவிட்டதாக நினைக்கிறேன்” என அவர் குறிப்பிட்டார். தனது ஓய்வு குறித்து ரசிகர்களிடையே நிகழ்ந்த சொற்போர் நச்சுத்தன்மை வாய்ந்தது என அஸ்வின் கவலை தெரிவித்தார்.







