கார் மீது கல்வீச்சு; அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
தன்னை ஒழித்துக்கட்ட பாஜக சதி என்றும் குற்றச்சாட்டு

டெல்லி, ஜன.19; தேர்தல் பரப்புரையின்போது தனது கார் மீது கல்வீசித் தாக்கப்பட்டதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தேர்தல் பரப்புரையை தான் பார்த்ததே இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்தத் தாக்குதலை பாரதிய ஜனதா திட்டமிட்டு நடத்தியதாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார். தன்னை ஒழித்துக்கட்ட பாஜக சதி செய்வதாகவும் அவர் சாடினார். தேர்தலில் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாது என்பதால், பாஜக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் விமர்சித்துள்ளார்.







