“பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசைகளை இடித்துவிடுவர்”
தேர்தல் பரப்புரையில் அமித் ஷா மீது கெஜ்ரிவால் விமர்சனம்

டெல்லி, ஜன.12; டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடிசைகளையும் இடித்துவிடுவார்கள் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசியபோது, பத்து ஆண்டுகளில் பாஜக 4 லட்சம் பேருக்கு 4,000 வீடுகளை மட்டுமே கட்டிக் கொடுத்துள்ளதாக கூறினார். டெல்லியில் குடிசைகளில் வசிப்போருக்கு வீடு கட்டிக்கொடுக்க பாஜகவுக்கு 1,000 ஆண்டுகள் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பாஜகவிற்கு வாக்களிப்பது தற்கொலை கடிதத்தில் கையெழுத்திட்டு கொடுப்பது போன்றது என கெஜ்ரிவால் பேசினார்.







