எச். ராஜாவின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.!

திமுக எம்.பி கனிமொழி குறித்தும், பெரியார் சிலை இடிப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டது தொடர்பான இரண்டு வழக்குகளில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றவாளி என தமிழக சிறப்பு நீதிமன்றம் இம்மாதம் 2 ந் தேதி தீர்ப்பளித்தது.

ஆறு மாத சிறை தண்டனை

எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளிலும் பாஜக தேசிய செயலாளர் ராஜாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்தது. மேலும், அவருக்கு மொத்தம் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க: சென்னையில், 48ஆவது புத்தகக்காட்சி தொடக்கம்

இருப்பினும், ராஜாவுக்கு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் அளித்து, 30 நாட்களுக்கு தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இரு வழக்குகளில் தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து எச் ராஜா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்திருந்தார்.

தண்டனை நிறுத்தி வைப்பு

எச் ராஜா தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x