“யுவராஜ் சிங்கின் தந்தை ஒரு பகுத்தறிவற்ற நபர்”
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரிந்தர் கண்ணா விமர்சனம்

டெல்லி, ஜன.15; கபில்தேவ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது, வடக்கு மண்டல அணியிலிருந்து காரணமேயின்றி தன்னை நீக்கியதாக, யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் குற்றஞ்சாட்டியிருந்தார். ஒரு கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கபில்தேவை சுடச் சென்றதாகவும், அவர் தனது தாயுடன் இருந்ததால், திரும்பிவிட்டேன் என்றும் யோகராஜ் இரு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். யோகராஜ் கூறியதை மறுத்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரிந்தர் கண்ணா, ‘அவர் (யோகராஜ் சிங்) ஒரு பகுத்தறிவற்ற நபர் என்பதை கபில்தேவ் நன்கறிவார்’ என தெரிவித்துள்ளார்.







