ரச்சின் ரவீந்திராவின் நெற்றியை பதம்பார்த்த பந்து
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது குற்றச்சாட்டு

லாகூர், பிப்.09; பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவின் நெற்றியில் காயம் ஏற்பட்டதற்கு விளக்குகளே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா ஆகிய 3 அணிகள் பங்கேற்கும் தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது.
கேட்ச் பிடிக்க முயல்கையில் நெற்றியில் தாக்கிய பந்து

முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா பாகிஸ்தான் அணியின் 38ஆவது ஓவரில் கேட்ச் பிடிக்க முயன்றபோது பந்து அவரது நெற்றியில் தாக்கியது.
இதனால் காயமடைந்த அவருக்கு மைதானத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
flood light-களின் தரம் குறைவு; பாகிஸ்தான் வாரியம் மீது சாடல்

லாகூர் கடாஃபி மைதானத்தில் flood light-களின் தரம் குறைந்ததே, ரவீந்திராவின் காயத்திற்கு காரணம் என கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பந்து வருவதை சரியாக பார்க்க முடியாத அளவுக்கு வெளிச்சம் குறைவாக இருந்ததாகவும், இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வசதி குறைபாடுகள் உள்ள பாகிஸ்தான் மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்த முடியும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.







