மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளுக்கு எதிராக 63 மனுக்கள்
இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல்

மும்பை, ஜன. 8 ; மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை எதிர்த்து இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 60க்கும் மேற்பட்ட மனுக்களை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அவற்றில் முறைகேடு, மறைக்கப்பட்ட குற்றவியல் வழக்குகள், சொத்துகளை மறைத்தல், EVM கோளாறுகள், கையூட்டு, வெளிப்படைத்தன்மை இல்லாமைபோன்ற காரணங்களுக்காக மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியினர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.







