நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் நடத்தப்பட்ட விதத்திற்கு எதிர்ப்பு
தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மூத்த வழக்கறிஞர் கடிதம்

டெல்லி, பிப்.08; அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை நடத்திய விதம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வீரேந்திர வசிஸ்தா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், நாடு கடத்தப்பட்டவர்கள் கை மற்றும் கால்களில் விலங்குகள் போடப்பட்டு ராணுவ விமானத்தில் ஏற்றி வரப்பட்டதாக வசிஸ்தா குற்றஞ்சாட்டி உள்ளார். “இந்த முறையை நாங்கள் ஆபத்தான குற்றவாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்; இது அடிப்படை மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் எனவும் வசிஸ்தா வலியுறுத்தியுள்ளார்.



