விடுப்பு மறுப்பு; சக ஊழியர்களுக்கு கத்திக்குத்து
கையில் கத்தியுடன் சாலையில் நடந்து சென்ற அரசு ஊழியர்

கொல்கத்தா, பிப்.06; விடுப்பு மறுக்கப்பட்டதால், அரசு ஊழியர் ஒருவர் சக ஊழியர்களை கத்தியால் குத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில், மாநில அரசுத் துறை ஒன்றில் பணியாற்றிவரும் அமித் குமார் சர்க்கார் என்பவரின், விடுப்பு கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
விடுப்பு விண்ணப்பம் நிராகரிப்பு; அரசு ஊழியர் ஆத்திரம்

இதனால் ஆத்திரமடைந்த சர்க்கார், இன்று (பிப்.06) தனது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சிலரை கத்தியால் குத்தினார். இதில் அலுவலகப் பாதுகாவலர் ஒருவரும் காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து ரத்தம் தோய்ந்த கத்தியுடன் அவர், நகர வீதிகளில் நடந்து சென்றார். அப்போது வழிப்போக்கர்கள் சிலர் சிலர் கத்தியை கீழேபோடுமாறு அவரைப் பார்த்து கூச்சலிட்டனர். ஒரு சிலர் சர்க்காரை தங்களது கைப்பேசியில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பரப்பினர்.
போலீஸ் எச்சரிக்கையை அடுத்து அரசு ஊழியர் சரண்








