பதவியேற்ற பின்னர் என்ன செய்யப்போகிறார் ட்ரம்ப்?
அதிரடியான உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்

வாஷிங்டன், ஜன.20; டொனால்டு ட்ரம்ப், அதிபராகப் பதவியேற்றவுடன் பல அதிரடியான உத்தரவுகளை பிறப்பிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்கிற சபதத்தை நிறைவேற்றும் வகையில் புதிய உத்தரவை அவர் பிறப்பிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. தேசிய எல்லையில் அவசரநிலையை அமல்படுத்துவதற்கான அறிவிப்பையும் ட்ரம்ப் வெளியிடுவார் எனப் பேசப்படுகிறது. தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் சோதனை நடத்துவதில் இருந்து அதிகாரிகளைத் தடுத்துள்ள கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் நடவடிக்கை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.







