மெஹ்பூபா முப்தி, மகள் இல்திஜாவுக்கு வீட்டுக்காவல்
தேர்தலுக்கு பிறகும் நிலைமை மாறவில்லை என இல்திஜா ட்வீட்

பாரமுல்லா, பிப்.08; ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்குப் பின்னரும் நிலைமை மாறவில்லை என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் இல்திஜா முஃப்தி குற்றஞ்சாட்டி உள்ளார். கடந்த புதனன்று பாரமுல்லா மாவட்டத்தில், சோதனைச் சாவடியில் கனரக வாகனத்தை நிறுத்த மறுத்த அதன் ஓட்டுநர் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற செல்லவிருந்த முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, அவரது மகள் இல்திஜா முஃப்தி ஆகிய இருவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள இல்திஜா, “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்வது கூட குற்றமாகக் கருதப்படுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.



