3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய மூவர் குழு
9 மாதங்களுக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை, பிப்.06; பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்வதற்கு தமிழ்நாடு அரசு குழு அமைத்திட முடிவு செய்துள்ளது.
மாநில அரசின் நிதி நிலையையும் பணியாளர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைனை அரசுக்கு அளித்திட மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
9 மாதத்திற்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் கே.ஆர். சண்முகம் மற்றும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை வரவு செலவு உறுப்பினர் செயலர் பிரதீப் தயாளள் ஆகிய மூவரைக் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இந்தக் குழு விரிவான அறிக்கையையும் பரிந்துரைகளையும் தமிழ்நாடு அரசுக்கு 9 மாதத்திற்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.






