பாகிஸ்தான் வம்சாவளி வீரருக்கு விசா கிடைக்கவில்லை
டி20 தொடருக்கு இந்தியா வருவதில் சிக்கல்; இங்கிலாந்துக்கு நெருக்கடி

டெல்லி, ஜன.14; பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாகிப் மஹ்மூத்-க்கு இந்திய விசா வழங்காததால் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய-இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து டி20 போட்டிகளைக் கொண்ட தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து வீரர் சாகிப் மஹ்மூத், இந்தியா செல்வதற்கான விசா இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் சாகிப் மஹ்மூத்தின் பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துவிட்டதால், அவர் இந்தியா செல்வாரா எனத் தெரியவில்லை.







