காசாவில் போர் நிறுத்தம் தொடங்குவதில் தாமதம்
இஸ்ரேல் பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் தராவிட்டால்..

காசா, ஜன.19; காசாவில் போர் நிறுத்தம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் நிறுத்தம் இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக விடுவிக்கப்படும் இஸ்ரேல் பணயக்கைதிகளின் பட்டியலை ஹமாஸ் தனது அரசுக்கு வழங்காத வரை போர் நிறுத்தம் தொடங்காது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதனிடையே, காசாவில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.



