7 வயது சிறுமி உலகசாதனை..!
3 மணிநேரம் இடைவிடாது நடனமாடி உலகசாதனை படைத்த 7 வயது சிறுமி.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில், 7 வயது சிறுமியான நிதர்சனா இடைவிடாமல் தொடர்ந்து 3 மணிநேரம் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார்.
பெல் பகுதியை சேர்ந்த கண்ணன் – சங்கீதா தம்பதியின் 7 வயது மகள் நிதர்சனா. சிறுவயது முதலே பரதநாட்டிய கலை மீது ஆர்வம் கொண்டதால், பெற்றோர்கள் நடன பயிற்சி அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், பரதநாட்டிய கலையில் சாதனை செய்யும் நோக்கில், இடைவிடாமல் தொடர்ந்து மூன்று மணி நேரம் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளார்.
சிறுமியின் இந்த முயற்சியை தி கிங்டம் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.







