பிரதமர் மோடிக்கு உமர் அப்துல்லா பாராட்டு
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக புகழ்ந்து பேச்சு

காஷ்மீர், ஜன.13; ஜம்மு காஷ்மீரில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக பிரதமர் மோடியை, முதலமைச்சர் உமர் அப்துல்லா பாராட்டியுள்ளார். அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அப்துல்லா,, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் முயற்சியால், எல்லையில் அமைதிக்கான நடவடிக்கைகள் தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்றடைந்துள்ளதாக அப்துல்லா பாராட்டினார். தேர்தலில் எந்த இடத்திலும் முறைகேடுகள் அல்லது அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாக புகார்கள் இல்லை என்றும் உமர் அப்துல்லா கூறினார்.







