அர்ஜுன் எரிகைசி புதிய சாதனை

உலகின் இரண்டாம் நிலை வீரராக உயர்ந்தார்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் – மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளைக் கடந்து உலகின் இரண்டாம் நிலை வீரராக உயர்ந்துள்ளார் அர்ஜுன் எரிகைசி.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில், சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளின் 4வது சுற்று போட்டிகள் நடைபெற்றன. ஈரானைச் சேர்ந்த அமீன் தபேதிபாய் – இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி இடையேயான போட்டியில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் வெற்றி பெற்றார், அமீன் தபேதிபாயை தனது 52ஆவது நகர்வில் வீழ்த்தினார் அர்ஜுன் எரிகைசி. இதன் மூலம் இந்த தொடரின் முதல் நிலை வீரராக புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ளார்.

அதே சமயம், செர்பியாவின் சரணா அலெக்ஸி, ஈரான் வீரர் மக்சூட்லூ பர்ஹாம் இடையேயான ஆட்டம், அமெரிக்கா வீரரான அரோனியன் லெவன், இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் இடையேயான ஆட்டம் மற்றும் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜராத்தி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வச்சியர் லாக்ரேவ் மாக்சிம் இடையேயான ஆட்டங்கள் சமனில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x