வரும் IPLஇல் தோனி விளையாடுவார்
CSK வின் காசி விஸ்வநாதன் நம்பிக்கை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தோனி வருகிற சீசனில் விளையாடுவார் என்கிற நம்பிக்கை இருப்பதாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அது குறித்து இன்னும் அவர் எங்களிடம் கூறவில்லை. அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். எங்களுக்கும் அவர் சிஎஸ்கேவில் ஆட வேண்டும் என்கிற ஆசையும் நம்பிக்கையும் இருக்கிறது.”
“அன்கேப்டு பிளேயர்ஸ் முறையை தோனிக்காக கொண்டு வரவில்லை. இது முதல் வருடத்தில் இருந்தே இருக்கிறது. அன் கேப்டு பிளேயர்ஸில் ஆறு முதல் ஏழு வீரர்கள் வரை அணிக்குள் வர இருக்கிறார்கள். சி.எஸ்.கே அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஏலத்திற்கு பின்னரே அது தெரிய வரும்” என்றார்.







