ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள், வீரர்கள்..!!
முன்பதிவு நாளை தொடக்கம்; ஆயத்தமாகும் களங்கள்

மதுரை, ஜன.5 ; மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. அவனியாபுரத்தில் வரும் 14ஆம் தேதியும், பாலமேட்டில் 15ஆம்தேதியும் ஏறு தழுவுதலை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூரில் 16ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. போட்டிகளில் பங்கேற்க ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். நாளை (ஜனவரி 6) மாலை 5 மணி முதல் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம்.






