வீரேந்திர சேவாக், மனைவியைப் பிரிகின்றாரா?
இன்ஸ்டாவில் ஒருவரையொருவர் பின் தொடராததால் சந்தேகம்

டெல்லி, ஜன.25; மணவிலக்கு வதந்திகளுக்கு மத்தியில் வீரேந்திர சேவாக் மற்றும் மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின் தொடராததால், அவர்கள் பிரிவது உறுதியா? என சந்தேகம் வலுத்துள்ளது.
முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் மற்றும் ஆர்த்தி கடந்த 2004-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஆர்யவீர் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
மனைவியைப் பிரிகிறாரா, சேவாக்?

கடந்த சில மாதங்களாக, சேவாக் சமூக வலைதளங்களில் பகிர்ந்த தனது புகைப்படங்களில் அவரது மனைவி ஆர்த்தி இல்லை. இதனை கவனித்த ரசிகர்கள், அவர்கள் பிரியப்போகின்றார்களா என பேசத் தொடங்கினர்.
சேவாக்கின் தனிப்பட்ட வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ரசிகர்கள் மத்தியில் ஊகங்கள் பரவி வருகின்றன. இதுபோதாதென்று சேவாக்கும், ஆர்த்தியும் தனித்தனியே வசித்து வருவதால், சந்தேகம் வலுத்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை

இருப்பினும், அவர்கள் இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்தியாவின் தலைச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படும் வீரேந்திர சேவாக், 104 டெஸ்ட்களில் 8,586 ரன்கள் எடுத்துள்ளார்.







