“காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்”
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் காட்டமான கட்டுரை

மும்பை, ஜன.13; காங்கிரஸ் கட்சி கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று, உத்தவ் தாக்ரே பிரிவு சிவசேனாவின் ஊதுகுழலான சாம்னாவில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. உமர் அப்துல்லாவின் கருத்துகளை மேற்கோள்காட்டி இந்தியா கூட்டணியின் தலைமை மற்றும் செயல்திட்டத்தில் தெளிவு இல்லை என சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி ஒன்றாக இருக்க வேண்டும்-அதற்கு ஒரு தலைவர் மற்றும் ஒரு ஒருங்கிணைப்பாளர் இருக்க வேண்டும்-காங்கிரஸ் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் சாம்னாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.







