ராணுவ விமானத்தில் நாடு கடத்தியது ஏன்?
அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

டெல்லி, பிப்.07; இந்தியர்களை நாடு கடத்துவதற்கு ராணுவ ஜெட் விமானத்தை அமெரிக்கா பயன்படுத்தியது குறித்து வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “சட்டவிரோத குடியேறிகள் விவகாரத்தை அமெரிக்கா ஒரு தேசிய பாதுகாப்பு நடவடிக்கையாக பார்த்ததால், 104 இந்தியர்களை நாடு கடத்த ராணுவ விமானத்தை பயன்படுத்தியிருக்கலாம்” என தெரிவித்தார். மேலும் 487 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிடம் கூறியதாகவும் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.



