கேப்டனாக சில மாதங்கள் நீடிக்க ரோகித் விருப்பம்
சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் கிரிக்கெட்டிற்கு 'குட் பை'

மும்பை, ஜன.14; இந்திய அணியின் கேப்டனாக இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்க அனுமதிக்குமாறு, கிரிக்கெட் வாரியத்தை ரோகித் சர்மா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்ற கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில், ரோகித் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடர வாய்ப்பில்லை என ரோகித் சர்மா கூறிவிட்டதாகவும் தெரிகிறது.



