தெரிஞ்சுக்கோங்க பெண்களே!

181 என்ற தொலைபேசி எண் மூலம் காவல்துறை, மருத்துவமனைகள், சட்ட சேவை மையங்கள் போன்றவற்றுக்காக உரிய முகமைகளுடன் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. மகளிர் உதவி எண் திட்டம் குறித்து மாநிலங்களவையில் பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், “கடந்த 2015ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மகளிர் உதவி எண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்து பெண்கள் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். 24x7x365 அவசரகால, அவசரமற்ற காலங்களில் உதவிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது பெண்கள் நலத் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் இது வழங்குகிறது” என்றார்.



