வாழ்க்கை என்பது நகர்தல்

ஓஷோவின் பொன்மொழிகள்

* வாழ்க்கை என்பது நகர்தல் என்று அர்த்தம். ஒன்று தன்னுணர்விலிருந்து முன்னேறிச் செல்வது. மற்றொன்று தன்னுணர்வு இழந்த நிலையில் கீழ் மட்டத்தில் பின்னோக்கிச் செல்வது.

* கொடுத்து ஏழையானாலும் எடுத்து பணக்காரனாகக் கூடாது. நீங்கள் கொடுத்தது கை விடாது, நீங்கள் எடுத்தது கைக்கொடுக்காது.

* பிறப்பால், வறுமையானவராக இருக்கலாம், உழைப்பால் வசதியானவராக மாறலாம், செயலால் மட்டுமே மனிதனாக வாழலாம்.

* வாழ்க்கையை நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, வாழ்க்கை உங்களை விரும்பிப் பார்ப்பது போல் ஏதாவது செய்திருக்க வேண்டும்.

* தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடுங்கள், இல்லையென்றால், இந்த உலகம் உங்களை புதைத்து விடும்.

* தயங்கி நிற்பவர்கள் ஒரு போதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை.

* உங்கள் தகுதியை உயர்த்தி கொண்டே இருங்கள். உங்களை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாகவும் பலவீனமாகவும் முடிய வேண்டும்.

* தோற்றுப் போய்விட்டோமே என உடைந்துப்போய் நிற்பதை விட, தோல்வி தானே என்று உறுதியுடன் திறம்பட தளராத தன்னம்பிக்கையோடு எழுந்து ஓரடி வையுங்கள்.

* அடுத்த அடி தானாக வைத்து வெற்றிப் பயணத்தை தொடங்கியிருக்கும் மனமும் உடலும்.

#படித்ததில்பிடித்தது

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x