“புஷ்பா” பெயர் இல்ல; ப்ராண்ட்!”

வெளியானது புஷ்பா -2 மிரட்டல் ட்ரெய்லர்!

அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா -2 திரைப்படத்தின் ட்ரெய்லர், “புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல ; ப்ராண்ட்!…” என கேப்சனுடன் வெளியாகி மிரட்டி வருகிறது. பல்வேறு மொழிகளிலும் ட்ரெய்லர் வெளியான 12 மணி நேரத்தில், பல மில்லியன் பார்வைகளை கடந்து சக்கைப்போடுப் போட்டு வருகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில், 2021-ம் ஆண்டில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதன் 2-வது பாகமான Pushpa -2 The Rule திரைப்படம், வரும் டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்து உள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். புஷ்பா -2 திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் உடன், தமன் பின்னணி இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த புஷ்பா -2 ட்ரெய்லர், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் நேற்று வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதேபோலவே புஷ்பா -2 படத்தில் ஶ்ரீலீலா கேமியோ செய்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புஷ்பா -2 திரைப்படத்திற்கான ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் இந்த படம் வெளியாகும் என தெரிகிறது. இதன் மதிப்பு மட்டும் ரூபாய் 270 கோடி ரூபாய் அளவிற்கு இருக்குமாம்… புஷ்பா -2 படம் திரையரங்கில் வெளியிடுவதற்கான வர்த்தகம் மட்டும் தற்போது வரை 650 கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக புஷ்பா திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவிஶ்ரீ பிரசாத் ஆகியோர் தேசிய விருதுகள் வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x