‘சவதீகா’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு
இளமை ஆர்ப்பரிப்பில் அஜீத்- திரிஷா ஜோடி

‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘சவதீகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

நடிகர் அஜீத் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இதில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ‘விடாமுயற்சி’ வெளியாகிறது. கடந்த மாதம் 28-ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘சவதீகா’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்பாடலை அனிருத் மற்றும் அந்தோணிதாசன் பாடியுள்ளனர்.

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான ‘பிரேக் டவுன்’ படத்தை தழுவி ‘விடாமுயற்சி’ உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.








