Pongal Gift: ரேஷன் கடைகளில் பொங்கல் இலவச வேட்டி சேலை!

Tamil Nadu Government Pongal Gift: தமிழ்நாட்டின் பண்டிகை அறுவடைத் திருநாளான பொங்கல், நன்றியறிதலையும் ஒற்றுமையையும் கொண்டாடுகிறது. இது அறுவடை காலம், சூரியன், இயற்கை மற்றும் தேசத்திற்கு உணவளிக்கும் கடின உழைப்பாளி விவசாயிகளைக் கொண்டாடுகிறது.

கைத்தறிதுறை அறிவிப்பு

தை 1 ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அன்று, தமிழக அரசு எப்போதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசி தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் 2025 பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேலையில், இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில், 48ஆவது புத்தகக்காட்சி தொடக்கம்

வேட்டி சேலை விநியோகம்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலவச வேட்டி சேலையை விநியோகிக்க, ஐனவரி 10ம் தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு வேடி சேலைகளை அனுப்ப கைத்தறிதுறை அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெற்றப்பட்ட இலவச வேட்டி சேலைகளை கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முன் பணம்

2025 பொங்கல் பண்டிகைக்கு 1 கோடியே 77 லட்சம் சேலைகளும், அதே போல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நெசவாளர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x