மென் பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு
மனைவிக்கு எதிரான எஃப்ஐஆரை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

பெங்களூரு, ஜன. 6; பெங்களூரு மென் பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில், அவரது மனைவி நிகிதா சிங்கானியாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கில் உள்ள முதன்மையான ஆதாரங்களை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், விசாரணையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கவலைகளை எழுப்பியது. முன்னதாக, உயிரை மாய்த்துக் கொள்ளும் முன்னர் அதுல் சுபாஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தில், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கடுமையாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.







