விமானியின் கடைசி 4 நிமிட குரல் பதிவு இல்லை
தென்கொரிய விமான விபத்து விசாரணையில் பின்னடைவு

சியோல், ஜன.12; தென் கொரியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியில், விமானியின் கடைசி நான்கு நிமிட குரல் பதிவு இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 179 பேரை பலிகொண்ட ஜெஜூ விமான விபத்து தொடர்பாக விசாரித்து வரும் தென்கொரிய விமானப் போக்குவரத்து துறையினர், கருப்புப் பெட்டியில் பதிவாகியிருக்கும் விமானியின் குரல் பதிவு, விசாரணைக்கு கைகொடுக்கும் என நம்பியிருந்தனர். ஆனால், கடைசி நான்கு நிமிட குரல் பதிவு காணவில்லை என்பதால், விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.







