பொங்கல் விழா தமிழினத்திற்கு உரித்தானது: வைரமுத்து
இறக்குமதி செய்யப்பட்டதல்ல எனக்கூறி வாழ்த்துச் செய்தி

சென்னை, ஜன.14; பொங்கல் திருவிழா இறக்குமதி செய்யப்பட்டதல்ல, அது தமிழினத்திற்கு உரித்தான விழா என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். பொங்கலையொட்டி வைரமுத்து வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “இந்த மண்ணில் விளைந்த கரும்பு, மஞ்சள், இஞ்சி, நெல், நாட்டுச் சர்க்கரை இவையாவும் பொங்கலின் கச்சாப் பொருள்கள். பொங்கலின் பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டவையல்ல; பொங்கல் திருவிழாவும் இறக்குமதி செய்யப்பட்டதன்று” எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, பொங்கலை கூடிக் கொண்டாடுங்கள்; வாழுங்கள்; வாழ்த்துங்கள் என்று வைரமுத்து கூறியுள்ளார்.






