ட்ரம்பின் உத்தரவுக்கு எதிராக 22 மாகாணங்கள் வழக்கு
பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வலுக்கும் எதிர்ப்பு

வாஷிங்டன், ஜன.22; அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுக்கு எதிராக 22 மாகாணங்கள் (மாநிலங்கள்) வழக்கு தொடுத்துள்ளன.
பிறப்புரிமை குடியுரிமை விவகாரம்

அமெரிக்காவில் பணிபுரியும் பிறநாடுகளைச் சேர்ந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெற்றோரின் நிலையைப் பொருட்படுத்தாமல் அமெரிக்க குடிமக்கள் என்று உத்தரவாதம் அளிக்கும் பிறப்புரிமைக் குடியுரிமை சட்டம் நூற்றாண்டு காலமாக நடைமுறையில் உள்ளது.
இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு எதிராக ஜனநாயக அட்டர்னி ஜெனரல் மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் வழக்கறிஞர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.
“அதிபர்கள் அரசர்கள் அல்ல”

பிறப்புரிமை குடியுரிமை பற்றிய கேள்விக்கு தீர்வு காணப்பட்ட ஒரு சட்டம் இதுவென்று அவர்கள் கூறியுள்ளனர். அதிபர்களுக்கு பரந்த அதிகாரம் இருந்தாலும், அவர்கள் அரசர்கள் அல்ல என வாஷிங்டன் அட்டர்னி ஜெனரல் நிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.







