போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக குற்றச்சாட்டு
பாலஸ்தீனியர்கள் காசாவிற்கு திரும்புவது தடுத்து நிறுத்தம்

காசா, ஜன.26; போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் காசாவிற்கு திரும்புவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் அல்லாதவர்களையும் விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ள போதிலும், Arbel Yehud என்ற பெண்ணை விடுவிக்கவில்லை என இஸ்ரேல் குற்றஞ்சாட்டி உள்ளது. அந்தப்பெண் உயிருடன் இருப்பதாகவும், அடுத்தவாரம் விடுவிக்கப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதனால் காசாவிலிருந்து துருப்புகளை திரும்பப்பெறும் நடவடிக்கையை இஸ்ரேல் தாமதப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



