பாகிஸ்தானில் சுட்டு வீழ்த்தப்பட்ட 30 பயங்கரவாதிகள்
கடத்தப்பட்ட 4 போலீசாரையும் மீட்ட பாதுகாப்புப்படை

பெஷாவர் / கைபர், ஜன.26; பாகிஸ்தானில், (Khyber Pakhtunkhwa) கைபர் பக்துன்க்வா பகுதியில், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். (Lakki Marwat) லக்கி மார்வத் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொல்லப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் தெற்கு வஜிரிஸ்தான் பகுதியிலிருந்து கடத்தப்பட்ட நான்கு போலீசாரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகளுக்காக பாதுகாப்புப் படையினரை பாகிஸ்தான் அரசு பாராட்டியுள்ளது.



