இந்தியாவால் அமெரிக்காவிற்கு தீங்கு: ட்ரம்ப்
3 நாடுகள் மீது அதிக வரி விதிப்போம் என எச்சரிக்கை

டெல்லி, ஜன.28; அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய 3 நாடுகள் மிகப்பெரிய அளவில் வரி வசூலிப்பவை என்று, அதிபர் டொனால்டு ட்ரம்ப் சாடியுள்ளார்.
ஃபுளோரிடாவில், குடியரசுக் கட்சியினர் மத்தியில் பேசிய ட்ரம்ப், “இந்த மூன்று நாடுகளும் (BRICS) பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கியவை, அவர்கள் தங்கள் நலனுக்காக செயல்படுபவர்கள்” எனக் குறிப்பிட்டார். “அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை” எனவும் அவர் விமர்சித்தார்.
இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

“இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளையும் இதே பாதையில் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும், ஏனெனில், நாங்கள் அமெரிக்காவை முதலிடத்திற்கு கொண்டு வரப்போகிறோம்” என்றும் ட்ரம்ப் பேசினார்.
“அமெரிக்காவிற்கு தீங்கு விளைவிக்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்கப் போகிறோம்; அவர்கள் தங்கள் நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர விரும்புகின்றனர்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாத தொடக்கத்தில் வாஷிங்டனில் ட்ரம்பை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.







