யுவராஜ் சிங்கின் பாராட்டால் நெகிழ்ந்த அபிஷேக் சர்மா
மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவு

மும்பை, பிப்.04; இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சதமடித்ததை பாராட்டிய யுவராஜ் சிங்கிற்கு அபிஷேக் சர்மா பதிலளித்துள்ளார். அப்போட்டியில், அபிஷேக் 54 பந்துகளில் 135 ரன்கள் நொறுக்கினார். இதனை பாராட்டி யுவராஜ் சிங் எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில், “அங்கு தான் நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன்..! உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்..!” எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அபிஷேக் இட்டுள்ள பதிலில், “யுவராஜின் பாராட்டால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



