வீரர்களின் செயல்திறன் அடிப்படையில் ஊதியம்?
செயல்திறன் குறைந்தால் அபராதம்: பி.சி.சி.ஐ ஆலோசனை

மும்பை, ஜன.15; இந்திய அணியில் செயல்திறன் குறைந்த வீரர்களுக்கு அபராதம் விதிக்க கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களின் முடிவுகளைத் தொடர்ந்து, வீரர்களின் செயல்திறன் அடிப்படையில் வெகுமதி அல்லது அபராதம் விதிக்கக்கூடிய ஒரு அமைப்பைத் தேர்வு செய்ய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. வீரர்களின் செயல்திறன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றதாக இல்லையெனில், அவர்கள் ஊதியக் குறைப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.







