சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

பிரிஸ்பேன் சர்வதேச ஒபன் டென்னிஸ்

பிரிஸ்பேன் சர்வதேச ஒபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில், பெலாரசின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் சர்வதேச ஒபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், உலக பெண்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் அரினா சபலென்கா, சர்வதேச தரவரிசையில் 107-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் போலினா குடெர்மெடோவா உடன் மோதினார். இதில் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி போலினா குடெர்மெடோவா அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் சுதாரித்து ஆடிய சபலென்கா, அடுத்த 2 செட்களையும் 6-3, 6-2 எனக் கைப்பற்றினார். இதன் மூலம் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் போலினாவை வீழ்த்தி, பிரிஸ்பேன் ஒபன் டென்னிஸ் மகளிர் சாம்பியன் கோப்பையை வென்றார் சபலென்கா.

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவை எதிர்த்து, உலக தரவரிசையில் 293-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ரைய்லி ஒபெல்கா பலப்பரீட்சை நடத்தினார். அப்போது முதல் செட்டில் லெஹாக்கா 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, திடீரென ரைய்லி ஒபெல்கா காயத்தால் அவதிப்பட்டார். தொடர்ந்து போட்டியில் இருந்து அவர் விலகியதால், பிரிஸ்பேன் ஒபன் டென்னிஸ் தொடரில், ஜிரி லெஹாக்கா கோப்பை வென்றதாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x