காசா போர் நிறுத்தம் இன்று நண்பகல் 12 மணிக்கு அமல்
போர் நிறுத்தம் தற்காலிகமானது என இஸ்ரேல் எச்சரிக்கை

காசா, ஜன.19; காசா போர்நிறுத்த ஒப்பந்தம் இந்திய நேரப்படி இன்று (ஜன.19) நண்பகல் 12 மணிக்கு அமலுக்கு வருகிறது. இதனையொட்டி இஸ்ரேலியப் படைகள் ரஃபாவிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளன. ஒப்பந்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களில் மூன்று இஸ்ரேலிய கைதிகள் மற்றும் 95 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். போர் நிறுத்தம் தற்காலிகமானது என எச்சரித்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு, இரண்டாம் கட்ட பேச்சு திட்டமிட்டபடி நடக்காவிட்டால், காசாவில் மீண்டும் தாக்குதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.



