“லா லிகா கால்பந்து தொடரில் இனவெறி அவமானம்”
பார்சிலோனா தடுப்பு ஆட்டக்காரர் பால்டே குற்றச்சாட்டு

பார்சிலோனா, ஜன.19; ஸ்பெயினில் நடைபெற்றுவரும் லா லிகா கால்பந்து தொடரில், இனவெறி அவமானத்திற்கு ஆளானதாக பார்சிலோனா வீரர் அலெஜான்ட்ரோ பால்டே குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (ஜன.18) நடைபெற்ற கெட்டாஃபி அணிக்கு எதிரான போட்டியின்போது, அவ்வணியின் ரசிகர்களால் தான் இனவெறி அவமானத்தை சந்தித்ததாக பால்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது தொடர்ந்து நடக்கக்கூடாத ஒன்று என்றும் அவர் கூறினார். இனவெறி மனப்பான்மையுடன் கூச்சலிடுபவர்கள் போட்டிகளுக்கு வரக்கூடாது; வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அலெஜான்ட்ரோ பால்டே கேட்டுக் கொண்டார்.







