“தலிபான்கள் பெண்களை மனிதர்களாகப் பார்ப்பதில்லை”
இஸ்லாமாபாத் உச்சி மாநாட்டில் மலாலா யூசுப்சாய் பேச்சு

இஸ்லாமாபாத், ஜன.13; தலிபான்கள் பெண்களை மனிதர்களாகப் பார்ப்பதில்லை என்று, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் குற்றஞ்சாட்டி உள்ளார். இஸ்லாமிய நாடுகளில் பெண் கல்வி குறித்து பாகிஸ்தானில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் மலாலா பங்கேற்றார். அப்போது அவர், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது கையாளும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு இஸ்லாமிய தலைவர்களை கேட்டுக்கொண்டார். காஸாவில் இஸ்ரேல் முழு கல்வி முறையையும் அழித்துவிட்டதாக மலாலா சாடினார்.







