காட்டுத்தீயால் பாதித்த பகுதிகளில் ட்ரம்ப் ஆய்வு
வெடிகுண்டு வைத்து தகர்த்தது போல காட்சியளிப்பதாக வேதனை

கலிஃபோர்னியா, ஜன.25; அமெரிக்காவில், கலிஃபோர்னியா மாகாணத்தில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆய்வு நடத்தினார். லாஸ் எஞ்சலஸில் காட்டூத்தீக்கு 25 பேர் பலியாகிவிட்டனர். 12,000 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் நாசமாகிவிட்டன. கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்ட அழிவுகளை அதிபர் ட்ரம்ப் ஆய்வு செய்து, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து எரிந்துவரும் தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடிவரும் சூழலில், பாதிக்கப்பட்ட பகுதிகள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது போல காட்சியளிப்பதாக ட்ரம்ப் வேதனை தெரிவித்துள்ளார்.



